‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாகடிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர்.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தஅறிவிப்பை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'வீரமே வாகை சூடும்" படத்தின்ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் கூறப்பட்டுள்ளது. விஷாலின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில்உள்ளனர். இப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#VeeramaeVaagaiSoodum#Saamanyudu Single #1 “Rise Of A Comman Man” releasing Tomorrow, GB.#VVS#RiseOfACommanMan#ThemeMusic@Thupasaravanan1@thisisysr@DimpleHayathi@iYogiBabu@johnsoncinepro@UrsVamsiShekar@HariKr_officialpic.twitter.com/KmGjLjFnO5
— Vishal (@VishalKOfficial) December 21, 2021