இயக்குனர் சிவா முதன் முதலில் அஜித்தை வைத்து இயக்கிய படம் வீரம். இந்த படம் 2014ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது வெளியானது. விஜய்யும் அஜித்தும் கடைசியாக ஒரே நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட்டு மோதியது இச்சமயத்தில்தான். இந்த படம் அஜித்துக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bachan pandey.jpg)
இப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் விக்கி கவுசல் நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், நேற்று அக்ஷய் குமாரை வைத்து பச்சன் பாண்டே என்று வீரம் இந்தி ரீமேக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. அதில், லுங்கி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோன்றியுள்ளார் நடிகர் அக்ஷய்குமார்.
ஃபர்கத் சம்ஜிஇயக்கும் இந்த படத்தை சஜித் நதியாவாலா தயாரிக்கிறார். அடுத்த வருட கிறிஸ்துமஸ் ரிலீஸாக இதை உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
Follow Us