hdfdf

Advertisment

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரும், சித்த மருத்துவருமான வீரபாபு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் இலவசமாக தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தார். இதுவரை ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் 5000 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். தற்போது இவர் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட பெயரான 'உழைப்பாளி' என்ற பெயரில் 10 ருபாய் மருத்துவமனையை இன்று காலை துவக்கியுள்ளார். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.