"வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி" - இரண்டாவது குழந்தை பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்

publive-image

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா மற்றும் தொழிலதிபர் விசாகன் இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டுகள் கடந்த நிலையில் சௌந்தர்யா தாய்மை அடைந்தார். இதனை தொடர்ந்து பிரசவ தேதி நெருங்கியதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌந்தர்யாவுக்கு நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக திரை பிரபலங்கள் பலரும் சௌந்தர்யா, விசாகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை தெரித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டதாவது, "கடவுளின் கருணையினாலும் பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், விசாகன், வேத் மற்றும் நான் வேத்தின் இளைய சகோதரரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மருத்துவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010-ஆம் ஆண்டு அஷ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்தார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ல் விவாகரத்து செய்தார். இருவருக்கும் வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்திற்கு பின்பு வேத் தனது தாய் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தற்போது வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth child delivery
இதையும் படியுங்கள்
Subscribe