Advertisment

தேடுதல் வேட்டையில் சிக்கிய வேதிகா! 

அர்ஜுனின் 'மதராஸி' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. தமிழில் முன்னணி நடிகர்களான லாரன்ஸ், அர்ஜுன், சிம்பு, சித்திதார்த், அதர்வா படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது ராகவா லாரன்சின் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் பிசியாக இருந்த இவர் தற்போது தமிழிலிருந்து பாலிவுட் போய் நடித்த கதாநாயகிகளின் பட்டியலில் இடம்பெற்றுளார். 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்து ஜோசப் இந்தியில் எடுக்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012ல் வெளிவந்த "த பாடி" என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாக நடிக்கும் இதில் முக்கிய வேடத்தில் ரிஷி கபூர் நடிக்கிறார். இப்படத்தில் 'காலகண்டி' பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

Advertisment

இப்படத்தில் இடம்பெற்றதை குறித்து வேதிகா பேசும்போது... "இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி" என்றார்.

Advertisment

இயக்குனர் ஜித்து ஜோசப் வேதிகா குறித்து பேசும்போது... "நாடு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பல ஆடிஷன்களுக்கு பிறகு எங்களிடம் வேதிகா சிக்கினார். அப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அவருக்கு அழகாக பொருந்துகிறது. இம்ரான்- வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும்" என்றார். இந்நிலையில் நடிகை வேதிகா தான் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் மும்பையில் தொடங்கியது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரீஷியசில் விரைவில் தொடங்கவுள்ளது.

Vedhika
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe