கடந்த 2000ஆம் ஆண்டு பாலிவுட்டில் சாம்பியன் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் நடிகராக அறிமுகமானார் ராகுல் தேவ். தன்னுடைய முதல் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த வில்லனுக்கான பரிந்துறையில் இடம்பெற்றார்.

Advertisment

rahul dev

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனைதொடர்ந்து விஜய்காந்த் நடிப்பில் உருவான நரசிம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். இதன் பின் அர்ஜூனுடன் பரசுராம், ஜெய்ஹிந்த்-2, ஜெயம் ரவியின் மழை, லாரன்சின் முனி, சூர்யாவின் ஆதவன், விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, அஜித்துடன் வேதாளம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார் ராகுல் தேவ்.

51 வயதை எட்டியுள்ள ராகுல் கடந்த 1998ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன்பின் ரீனா புற்றுநோயால் 2009ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவர்கள் இருவருக்கும் சித்தார்த் என்ற மகன் உள்ளார். ரீனா இறந்த பின்னர் 11 ஆண்டுகள் தனியாளாக தன் மகனை வளர்த்து வந்தார் ராகுல்.

Advertisment

இந்த நிலையில் ராகுல் தேவுக்கும், இந்தி நடிகை முக்தா கோட்சேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. முக்தா, தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் ஜோடியாக நடித்தவர். இவருடைய வயது 33. ராகுலுக்கும் முக்தாவுக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது. முக்தாவுடன் ஏற்பட்டுள்ள காதலை ராகுல் தேவ் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த காதல் குறித்து ராகுல் கூறும்போது, “எனக்கும் முக்தாவுக்கும் உள்ள காதல் மறைந்த எனது மனைவியின் குடும்பத்தினருக்கு தெரியும். ஒரு திருமண விழாவில் இருவரும் சந்தித்து நட்பானோம். அதன்பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களுக்கு இருக்கும் 18 வயது வித்தியாசம் காதலுக்கு தடையாக இல்லை” என்றார்.