Advertisment

வசந்தபாலன் இயக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Vasanthabalan

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வசந்தபாலன், நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாராவிஜயன் நடிக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாக பாதியில் தடைப்பட்டது.

Advertisment

தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ஜே.எஸ்.கே. மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vasantha balan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe