Skip to main content

'அதை எடுத்துகிட்டு அப்படியே போராட்டத்தில் இருந்து விலகி விட வேண்டும்' - வசந்தபாலன் யோசனை 

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் 'மெரினா புரட்சி' என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. 

 

vasanthabalan

 

நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் 'புட் சட்னி' புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது. 

 

 

இந்தநிலையில் இந்த மெரினா புரட்சியில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் பேசியபோது.... "தற்போது உள்ள இளைஞர்கள் பற்றி ஒருவிதமான குற்றச்சாட்டு இருந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த சென்னை வெள்ளப்பெருக்கின் போதும், ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற மெரினா போராட்டத்தின் போதும் இளைஞர்களின் எழுச்சி அவர்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. எப்போதுமே போராட்டத்தின் போது மகாத்மா காந்தி பாணியில் முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு போராட்டத்திற்கு தற்காலிக வெற்றிகள் கிடைத்தாலே போதும், அதை எடுத்துக்கொண்டு அப்படியே போராட்டத்தில் இருந்து விலகி விட வேண்டும். மீண்டும் அதை நீடிக்க நினைத்தால் மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் இதைத்தான் மெரினா புரட்சி இதிலும் பார்க்க முடிகிறது” என்றார்.

 

சார்ந்த செய்திகள்