Advertisment

"ரிப்பீட் ஆடியன்ஸ் சமீப காலத்தில் எந்தவொரு படத்திற்கும் வரவில்லை" - வசந்த் ரவி

vasantha ravi speech at  asvins thanks giving meet

Advertisment

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாகத்திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் தருண் தேஜா பேசியதாவது, “நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையை நான் எழுதும்போதே பார்வையாளர்களுக்கு நல்லதொரு ஹாரர் சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டும் என்றுதான் எழுதினேன். அது சரியாக போய் சேர்ந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இரண்டு, மூன்று முறை பார்வையாளர்கள் திரும்ப வந்து பார்க்கிறார்கள் என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகர் என்பதையும் தாண்டி அஸ்வின் எனக்கு நல்ல சகோதரர். கிளைமாக்ஸில் வசந்த் ரவியின் கடின உழைப்பு பாராட்டுதலுக்குரியது” என்றார்.

நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, “வளர்ந்து வரக்கூடிய நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது. இதற்கு காரணமாக இருந்த என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாபி சார் தமிழில் இனி பெரிய படங்கள் தயாரிப்பார். அதற்கு ‘அஸ்வின்ஸ்’ முதல் படமாக இருக்கும் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. தருண் ஒரு எனர்ஜியான இயக்குநர். ‘ராக்கி’ அருண் எப்படி இப்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ இயக்குகிறாரோ அதுபோல தருணுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்தப் படத்திற்கு தியேட்டர் விசிட் போனபோது, பார்வையாளர்கள் கொடுத்த வரவேற்பு அவ்வளவு எமோஷனலாக இருந்தது. இதுபோல, ரிப்பீட் ஆடியன்ஸ் சமீப காலத்தில் எந்தவொரு படத்திற்கும் வரவில்லை. இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்தின் இரண்டாவது பாகம் குறித்தஅறிவிப்பு சீக்கிரம் வரலாம்” என்றார்.

actor vasanth ravi
இதையும் படியுங்கள்
Subscribe