vasantha ravi new film

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரவேற்பைப்பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போதுஇயக்குநராக அறிமுகமாகிறார். இவர் முன்னதாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கியுள்ளார்.

Advertisment

சபரீஷ் நந்தா இயக்கும் புதிய படத்தை ஜெ.எஸ்.எம். புரோடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள். தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் என்று பலரின் கவனத்தை ஈர்த்த வசந்த் ரவி கதாயாகனாக நடிக்கிறார்.

Advertisment

வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இது தவிர விஸ்வாசம் படத்தில் அஜித் குமாரின் மகளாக நடித்து புகழ் பெற்ற அனிகா சுரேந்திரன்இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற புஷ்பா படத்தில் நடித்த சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், இயக்குநர் ஷங்கர் உருவாக்கி வரும் ராம் சரண் படத்திலும், மாவீரன் மற்றும் ஜப்பான் படங்களிலும் சுனில் நடித்திருக்கிறார்.

Advertisment

இந்த படத்தின் மூலம், நடன இயக்குநர் கல்யாண், முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அஜ்மல் தசீன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.