/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/136_33.jpg)
இயக்குநர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலனின் 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது வசந்த பாலன் பேசுகையில், "ஒரு கட்டத்தில் நான் ஐசியுவில் மூச்சுத்திணறிக்கொண்டு மருத்துவமனையில் இருந்தேன். டாக்டருக்கு தெரியவில்லை. ஆனால் என் நண்பன் வரதராஜனுக்கு தெரிஞ்சு இதில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கூறி அவன் டாக்டராக மாறினான். பின்பு எம்ஆர்ஐஸ்கேன் எடுத்து பார்த்தபோது தான் எல்லாம் தெரியவந்தது. அன்றைக்கு மட்டும் அவன் பாக்காமல் இருந்திருந்தால் ஒரு நினைவு அஞ்சலி போஸ்டரோடு என் வாழ்க்கை முடிந்திருக்கும். அது மிகப் பெரிய நட்பு. இந்த வாழ்க்கையே ஒரு ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)