Advertisment

“அந்த கதாபாத்திரமாகத் தோற்றமளிக்கிறார்கள்” - வசந்த பாலன் பாராட்டு

vasantha balan praised gv kalvan movie

Advertisment

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் வசந்த பாலன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “நேற்று கள்வன் திரைப்படம் பார்த்தேன். இரண்டு திருடர்களின் வாழ்வில் பாரதிராஜா சாரும் யானையும் நுழையும் போது என்னாகிறது? என்கிற கதையில் கிராமம், அசலான கிராமத்து மனிதர்கள் என திரைப்படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஜி.வி பிரகாஷும் பாரதிராஜா சாரும் அந்த கதாபாத்திரமாக தோற்றமளிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

vasantha balan praised gv kalvan movie

Advertisment

ஆர்யா, “டார்லிங் ஜி.வி ப்ரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் சுவாரசியமான பின்னணியில் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. எமோஷ்னலாக பெரிதளவு கனெக்ட் ஆகிறது. பாரதிராஜா சார் அற்புதமாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷுடன் அவரின்கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருக்கிறது. நெகட்டிவ் ஷேடில் ஜி.வி பிரகாஷ் நடித்திருப்பது எதிர்பாராத ஒன்று. அதை சரியாக பண்ணியுள்ளார்” என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்,அவரது எக்ஸ் பக்கத்தில் “கள்வன் ஒரு யதார்த்தமான த்ரில்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை சுவாரஸ்யமாக்கும். ஜி.வி பிரகாஷ் மீண்டும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக யானையோடு அவர் துரத்தும் காட்சி சிறப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

GV prakash vasantha balan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe