Advertisment

''அதைப் பார்க்கும் போது என் மனம் நொறுங்கிவிட்டது'' - நடிகர் வசந்த் ரவி வருத்தம்!

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதேபோல் ஓய்வின்றி உழைத்துவரும் காவல் துறையினருக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் அவ்வப்போது திரைத்துறையினர் உதவி வருகின்றனர். அந்தவகையில் 'தரமணி' 'ராக்கி' பட நடிகர் வசந்த் ரவி சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 சுகாதார கருவிகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Advertisment

jhvj

''இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது, புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமாகப் பாதுகாப்பாக இருப்போம். நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது.

Advertisment

ஆனால், சென்ற வாரம் நான் மளிகைக் கடைக்குச் சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்தப் பாதையில் தூய்மைப் பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன். இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவைச் சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாருக்கிறார்கள். ஆகையால், அவர்களுக்கு 1000 சுகாதார கருவிகளை (கையுறைகள், முகமூடிகள்) சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன். இதுபோல், உங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோவை மாவட்டம் தரமணி வசந்த் ரவி ரசிகர் மன்றத்தின் சார்பாக மே மாதம் 3-ம் தேதி வரை இடிகரை பகுதி அனைத்து வீடுகளுக்கும் மதியச் சாப்பாடு தர ஏற்பாடு செய்யப்பட்டது.

vasanth ravi rocky
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe