Skip to main content

வாரிசு அப்டேட்; வைரலாகும் விஜய் வீடியோ!

 

varisu movie next schedule for vizag

 

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் ’வாரிசுடு’ என தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. 

 

இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று(31.7.2022) சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய்யை  ரசிகர்கள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.