கமல் படத்தில் வரலட்சுமி சரத்குமார்!

varusarthkumar

கடந்த 1979ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் நீயா. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு நீயா 2ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகிறது. இதில் வித்யாசமான வேடத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து , தலக்கோணம் , சென்னை , மதுரை , கொடைக்கானல் , சாலக்குடி பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கும் இப்படத்தை பற்றி இயக்குனர் L.சுரேஷ் பேசும்போது...”இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு நீயா ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 வருடங்களுக்கு பின் அதே பெயரில் நீயா 2 படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால்நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன். இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளதுஎன்றார்.

kamal varusarathkumar
இதையும் படியுங்கள்
Subscribe