Advertisment

வருண் தவான், நீது கபூர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கரோனா!

varun

Advertisment

மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மனைவியும், ரன்பீர் கபூரின் அம்மாவுமான நீது கபூர்,'ஜக் ஜக் ஜியோ' என்னும் படத்தில் நடித்து வருகிறார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சண்டிகரில் ஆரம்பமானது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, அதில் பங்குபெற்ற அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து நவம்பர் மாதம் பதிவிட்டிருந்த நீது கபூர், தனக்குப் பரிசோதனை நடந்து, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.

தற்போது தொற்று ஏற்பட்டுள்ளதால்,62 வயதான நீதுவை, ரன்பீர் கபூர், விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு வரவழைத்துசிகிச்சை ஏற்பாடுகளைச் செய்துள்ளார். சண்டிகரில் அவர் தனியாக இருக்க முடியாது என்பதால் மும்பையில் மருத்துவமனையில் வைத்து அம்மாவுக்கு சிகிச்சை செய்ய ரன்பீர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisment

இப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் வருண் தவானும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், சண்டிகரிலேயே தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார். இவர்களோடு, அனில் கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகிய நடிகர்களும், அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தினர். ஆனால் இவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe