Skip to main content

வருண் தவான், நீது கபூர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கரோனா!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

varun

 

மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மனைவியும், ரன்பீர் கபூரின் அம்மாவுமான நீது கபூர், 'ஜக் ஜக் ஜியோ' என்னும் படத்தில் நடித்து வருகிறார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சண்டிகரில் ஆரம்பமானது. 

 

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, அதில் பங்குபெற்ற அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து நவம்பர் மாதம் பதிவிட்டிருந்த நீது கபூர், தனக்குப் பரிசோதனை நடந்து, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.

 

தற்போது தொற்று ஏற்பட்டுள்ளதால், 62 வயதான நீதுவை, ரன்பீர் கபூர், விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு வரவழைத்து சிகிச்சை ஏற்பாடுகளைச் செய்துள்ளார். சண்டிகரில் அவர் தனியாக இருக்க முடியாது என்பதால் மும்பையில் மருத்துவமனையில் வைத்து அம்மாவுக்கு சிகிச்சை செய்ய ரன்பீர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 

இப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் வருண் தவானும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், சண்டிகரிலேயே தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார். இவர்களோடு, அனில் கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகிய நடிகர்களும், அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தினர். ஆனால் இவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பேபி ஜான்’ - அப்டேட் கொடுத்த அட்லீ

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
atlee revealed the title of varun dhawan keerthy suresh movie

இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார். இதனிடையே ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கிறார்கள். 

காளீஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிக்கின்றனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் ஆக்சன் ஜானரில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. மேலும் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மே 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேபி ஜான் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது. மேலும் புது போஸ்ட்ரையும் அட்லீ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

Next Story

'போலாம் ரை...' - வருண் தவானுடன் ஆட்டோ ரைடில் கீர்த்தி சுரேஷ்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

keerthy suresh varun dhawan auto ride video viral on social media

 

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தை தாணு தயாரித்திருந்த நிலையில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அதே ஆண்டு இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் ஷாருக்கான், ரோஹித் ஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்தது. பின்பு கைவிடப்பட்டது. 

 

இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இப்படத்தில் வருண் தவான் நடிப்பதாக தற்போது வரை தகவல் இருந்து கொண்டே வருகிறது. அண்மையில் அட்லீ தயாரிப்பில் ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்கத்தில் வருண் தவான் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம் அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கீர்த்தி சுரேஷ் சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் வருண் தவானும், கீர்த்தி சுரேஷும் மும்பையில் ஒரு ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியான நிலையில் தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது.