Skip to main content

'சர்கார்' பட வழக்கை வாபஸ் வாங்க கை மாறிய பணம் எவ்வுளவு தெரியுமா...?

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
sarkar

 

 

 

'சர்கார்' பட கதை பிரச்னையில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குனர் முருகதாஸ் தரப்பில் தகவல்கள் வெளியான நிலையில் சர்க்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் திரைப்படத்தின் துவக்கத்தில் கதை 'நன்றி' என குறிப்பிட்டு வருண் ராஜேந்திரன் பெயரை வெளியிடவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் சமரசத்திற்கு ரூ.30 லட்சம் வருண் கேட்ட நிலையில் அதை தருவதாகவும் முருகதாஸ் ஒத்துக்கொண்டுள்ளார். கதையை திருடவில்லை என்று ஏ ஆர் முருகதாஸ் கூறி வந்த நிலையில் திடீரென சமரசத்திற்கு  ஒப்புக்கொண்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதைத்தொடர்ந்து உதவி இயக்குனர் வருன் ராஜேந்திரன் தொடர்ந்த சர்கார் பட வழக்கை வாபஸ் பெற்றார். மேலும் வழக்கு விசாரணையை மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம். இந்நிலையில் வழக்கு வாபஸ் ஆனதால் ஏற்கனவே அறிவித்த தேதிப்படி தீபாவளியன்று 'சர்கார்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் பட விவகாரம்; ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

High Court Cancelled case on Murugadoss basses on Supreme Court Order

 

சர்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இதனால் அரசின் திட்டங்களைத் தவறாகக் குறிப்பிடுவதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிரான புகார், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்டதாகவும், அதனால் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சூட்டிகாட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமை எதிராகப்  பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 


 

Next Story

தர்பார் நஷ்டமென ஏ.ஆர்.முருகதாஸ் மிரட்டப்பட்ட விவகாரம்!- காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருப்பதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் கூறியுள்ளார். இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். 

darbar movie loss chennai high court order ar murugadoss

 
தர்பார் திரைப்பட நஷ்ட விவகாரம் தொடர்பான மிரட்டல் குறித்தும் பாதுகாப்பு கோரியும் ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பிப்ரவரி 10- ஆம் தேதி விளக்கமளிக்க காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
 
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 3- ம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக, வினியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த அடையாளம் தெரியாத 25 பேர், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.  

darbar movie loss chennai high court order ar murugadoss

அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் திரைப்படத்தில்,  இயக்குநராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை மிரட்டி வருவதாகக் குற்றம் சாட்டி இருந்தார். 
 
இந்த மனு, இன்று (06/02/2020) நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 3-ம் தேதி முதல் இச்சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிப்ரவரி 4-ம் தேதி காவல்துறைக்கு மனு அளித்ததாகவும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்தச் சம்பவங்கள் இரு வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளதால், இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார். 
 
இதனை ஏற்ற நீதிபதி, ஏ.ஆர்.முருகதாஸின் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக பிப்ரவரி 10-ம் தேதி விளக்கமளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.