style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'சர்கார்' பட ப்ரோமோஷனில் பிசியாக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சரத்குமார் தனக்கும் விஷாலுக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசியபோது... "நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா விஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை. விஷால் திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை" என்றார். விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகவுள்ள 'சர்கார்' படத்தில் வரலட்சுமி சரத்குமார் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.