varu

Advertisment

சேவ் சக்தி அமைப்பு, சமூக தொண்டு என சமூக அக்கைறையில் படு பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார். தற்போது மாரி-2, கன்னிராசி, பாம்பன், நீயா-2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி 2, விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதியதாக 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கும் இப்படத்தை கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.