/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/muruga.jpg)
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றவது முறையாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை விமான நிலையத்தில் ஆரம்பமானது. இதில் முதன் முதலாக நடிகை வரலட்சுமியும் இணைந்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். மேலும் நடிகை வரலட்சுமியும் தற்போது அரசியல்வாதியாக நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த படப்பிடிப்பில் பச்சை நிற காட்டன் புடவை அணிந்த பெண் அரசியல் வாதியாக வரலக்ஷ்மி தோன்றினார். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)