
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தை இயக்குனர் பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் 'விண்ணோடும் மண்ணோடும்' என தொடங்கும் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். மேலும் 'வர்மா' படத்தின் திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் கைப்பற்றியிருக்கிறார். படத்தை வரும் பிப்ரவரியில், காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளனர் இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்குனர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.