Advertisment

இணையத்தில் வெளியான வர்மா பைரசி ப்ரிண்ட்! 

varma

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் அர்ஜூன் ரெட்டி. இதனை தொடர்ந்து இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக்கானது. தமிழில் இந்த படம் இரண்டு முறை ரீமேக் செய்யப்பட்டது. அதில் இரண்டாவதாக, ஆதித்ய வர்மா என்ற தலைப்பில் உருவான படம்தான் திரையரங்கில் ரிலீஸானது.

Advertisment

முதன் முதலில் த்ருவ் விக்ரமை வைத்து பாலாதான் இயக்கினார். ஆனால், படம் வெளியாக வேண்டிய சமயத்தில் தயாரிப்பாளர் இந்த படம் வெளியாகபோவதில்லை என்று அறிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Advertisment

அதன்பின் தான் அர்ஜூன் ரெட்டி படத்தில் பணிபுரிந்த துணை இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என இயக்கி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஓடிடியில் நேரடியாக வெளியானது. முதலில் இந்தியாவில் வெளியாகாது என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர் தற்போது ஆன் டிமாண்ட் முறையில் இந்தியாவில் வெளியானது வர்மா.

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் வர்மா படத்தின் பைரசி காபி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் பாலாவின் இயக்கத்தில் த்ருவ் நல்ல நடிகனாக வெளிபட்டிருக்கிறார் என்று தெரிவித்து வருகின்றனர்.

dhruv vikram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe