style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
விஜய் தேவரகொண்டா - ஷாலினி பாண்டே கூட்டணியில் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இதன் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க, நாயகியாக புதுமுகம் மேகா நடிக்கிறார். இயக்குனர் பாலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் தமிழ் ரசிகர்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.