Skip to main content

ரசிகர்களை குஷி படுத்திய விஜய்; வைரலாகும் வீடியோ

 

varisu vijay meet fans video goes viral

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

 

'வாரிசு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை எண்ணூரில் நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அங்கு விஜய்யை பார்க்க சென்றுள்ளனர். ஆனால் விஜய் வெளியே வரவில்லை. பின்பு போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று இரவும் விஜய்யை பார்க்க ரசிகர்கள் திரண்டுள்ளனர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார். நேற்று முன்தினம் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் நேற்று விஜய்யை பார்த்தவுடன் குஷியில் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.