varisu trailer update

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

Advertisment

வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (04.01.2023) மாலை 5மணிக்கு வெளியாகும் எனத்தெரிவித்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலான 'வா தலைவா' என்ற பாடலின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளது.

ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருந்தும் இன்னும்ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை. எனவே நாளை வெளியாகவுள்ள ட்ரைலரில் ரிலீஸ் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்திற்குத்தணிக்கை குழு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.