varisu trailer released

Advertisment

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர்தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில் ஆக்சஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல தெரிகிறது.

ட்ரைலரில் வரும் "எல்லா இடமும் நம்ம இடம் தான்" மற்றும் "கிரௌண்ட்மொத்தம்உன் ஆளுங்க இருக்கலாம், ஆனா ஆடியன்ஸ் எல்லாரும் ஒருத்தர மட்டும் தான் பார்ப்பாங்க. ஆட்ட நாயகன்" உள்ளிட்ட வசனங்கள்ரசிகர்களின்கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும்நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment