பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சிபைடிப்பள்ளிஇயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகராஷ்மிகாமந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா,ஜெயசுதாஉள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கவுரவ வேடத்தில் தெலுங்குசூப்பர்ஸ்டார்மகேஷ்பாபுநடிக்கவுள்ளதாகக்கூறப்படுகிறது.தமன்இசையமைக்கும் இப்படத்தைதில்ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும்எனப்படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் தனது48 வதுபிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் வாரிசு படத்தின்ஃபர்ஸ்ட்லுக்மற்றும்செகண்ட்லுக்போஸ்டர்களைபடக்குழு வெளியிட்டுள்ளது. இந்தபோஸ்டர்கள்சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில் தற்போது படத்தின்மூன்றாவதுபோஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. அந்தபோஸ்டரில்நடிகர் விஜய்பைக்கில்ஸ்டைலாகஅமர்ந்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்தபோஸ்டர்கள்வெளியாகி வருவதால் விஜய்ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.