varisu thaman overwhelmed by fans

Advertisment

தமிழ்த் திரையுலகின் ரசிகர்கள் தாண்டி பலரால்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெகு விமரிசையாக ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாதுதிரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

அந்த வகையில் வாரிசு படக்குழுவினர், இயக்குநர் வம்சி, இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலர் சென்னையிலுள்ள ரோகிணிதிரையரங்கில் ரசிகர்களுடன்படத்தைப் பார்த்துள்ளனர். அப்போது காட்சி முடிந்த பிறகு அங்கிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர். அப்போது தமன், ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து கண் கலங்கி அழுதார். இந்த வீடியோதற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் திரையரங்கிற்கு வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய வம்சி, "எங்கள் அனைவருக்கும் ஒரு எமோஷ்னலான தருணம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் எல்லாருக்கும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் நன்றி" என்றார்.

Advertisment