varisu Music launch  Vijay speech 

Advertisment

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். ஏற்கனவே இப்படத்தில் விஜய் பாடிய 'ரஞ்சிதமே', சிம்பு பாடிய 'தீ தளபதி' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவது பாடலான அம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (24ஆம் தேதி) சென்னையில் நடந்தது. இதில், நடிகர் விஜய் எப்போதும்போல், தனது ஸ்டைலில் ஒரு குட்டி கதை சொல்லி முடிக்க, இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள், விஜய் தனது ரசிகர்களுடன் ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க, உடனடியாக செல்ஃபி எடுக்க விஜய் தயாரானார். ஆனால், மேடையில் அவரிடம் போன் இல்லாததால், தொகுப்பாளர் ராஜுவிடம் போன் வாங்கிய விஜய், தனது ரசிகர்கள் பட்டாளத்தை ஒரே ஃபிரேமில் அடக்கமுடியாது என செல்ஃபி வீடியோவை எடுத்தார். அதனை அப்படியே ட்விட்டரில் போஸ்ட் பண்ணச் சொல்லி ராஜு சொல்ல, நடிகர் விஜய், “எனக்கு ட்விட் பண்ண தெரியாது, என் அட்மின் தான் பண்ணனும்; அவர வரச் சொல்லுங்க” என்று சொல்ல விஜய்யின் ரசிகர்கள் அரங்கத்தை அதிரவைத்தனர். மேலும், அந்த செல்ஃபி வீடியோ உடனடியாக ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ எனும் ஹேஷ் டாகில் உடனடியாக போஸ்ட் செய்யப்பட்டு தற்போது சமூவலைதளங்களில் வைரலாகிவருகிறது.