/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/250_40.jpg)
விஜய் நடிப்பில்வம்சி இயக்கத்தில்பொங்கல்திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில்வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடி ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும், அண்மையில் படத்தின் வெற்றிவிழாவைபடக்குழுவினர்கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் இயக்குநர் வம்சிதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அவரது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், "தமிழ்நாட்டுக்குமக்களுக்கு ரொம்ப நன்றி. படத்துக்கு அவர்கள் காட்டிய வரவேற்புக்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன்" என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய்யை வைத்துபடம் இயக்கிவிட்டீர்கள். அஜித்தை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த வம்சி, “அது பற்றி இப்பொழுதுபேச முடியாது. இப்போது கோவிலுக்கு வந்துள்ளேன்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)