/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1573_1.jpg)
விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை தீபாவளி அன்று வெளியாவதாகதகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிறிய க்ளிம்பஸ்வீடியோவையும் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இதனைஉறுதி செய்யும் வகையில் இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதள பக்கத்தில் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)