'அலங்கார அல்லி நிலா... ஆடை போட்டு நின்னாலே...' - ராஷ்மிகாவை கொஞ்சும் விஜய்

varisu first single Ranjithame Lyric Song released

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="421ec11f-cf65-4b94-9da8-69ef3a86fd3c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_28.jpg" />

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு முதல் பாடலான 'ரஞ்சிதமே' ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் இப்பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை பார்க்கையில்விஜய்க்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே நடக்கும் காதலை விவரிக்கும் வகையிலும்விஜய் ராஷ்மிகாவை காதலுடன் கொஞ்சுவது போலவும் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பாடலில் வரும் அலங்கார 'அல்லி நிலா...ஆடை போட்டு நின்னாலே...' வரிகள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்று வருகிறது. காதல் குத்துப் பாடலாக வெளியாகியுள்ள இப்பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் முந்தைய படங்களான 'மாஸ்டர்', 'பீஸ்ட்' போன்ற படங்களில் முதல் பாடலாக வெளியான 'குட்டி ஸ்டோரி' மற்றும் 'அரபிக் குத்து' பாடல்கள் யூட்யூபில் சாதனைகள் படைத்தன. அந்த வகையில் 'வாரிசு' படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் 'ரஞ்சிதமே' பாடலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor vijay rashmika mandana thaman Vamshi Paidipally varisu movie
இதையும் படியுங்கள்
Subscribe