Varisu film celebration Helium balloon fire accident

தமிழ்த் திரையுலகின் ரசிகர்கள் தாண்டி பலராலும்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெகு விமர்சையாக ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளன. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது நிறைய திரைப்பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

Advertisment

மேலும் திரையரங்குகள்முழுவதும் இரு நடிகர்களின் ரசிகர்களும்பேனர், போஸ்டர் மற்றும் பட்டாசு என திருவிழாவாகக் கொண்டாடினர். அந்த வகையில், சென்னை பூந்தமல்லியில் இருக்கும் ஈவிபி திரையரங்கில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

வாரிசு படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பட்டாசின்தீப்பொறி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஹீலியம் கேஸ் பலூனில்பட்டு பலூன் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ரசிகர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் பெரிதளவு காயம் ஏற்படவில்லைஎனக் கூறப்படுகிறது.

பின்பு காவல்துறையினர் அந்த பலூன் மற்றும் கேஸ் சிலிண்டரைஅப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால்அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.