/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_17.jpg)
விஜய் தற்போது பிரபலதெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
அடுத்த மாதம் வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே இப்படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தற்போதுபடத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய், ராஷ்மிகா, இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானவிஜய் ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது ரசிகர்கள் அரங்கத்தில் உள்ள இருக்கைகளை சேதப்படுத்தியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், சேதம் குறித்துகணக்கெடுத்து'வாரிசு' படத்தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)