தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் வரலட்சுமி சரத்குமார், கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் வெளியான ‘பீனிக்ஸ்’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது ‘ரிசானா’ என்ற படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபிக் மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்த அவர் இப்படத்ஹ்டை இயக்குவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த சூழலில் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர், இயக்குநர் என இரண்டு அவதாரம் எடுத்து அதில் நடிக்கவும் செய்து ரசிகர்ளை வியக்கவைத்துள்ள அவர் அனைவரது ஆசீர்வாதம் வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி தற்போது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
I’m so excited to be starting my journey as a director .. To be producing alongside my sister Pooja is a bigger bonus..Thank you to my Actors and Technicians for having faith in me.. I will do my very best not to let you down.. Need all your blessings.. #SARASWATHI let the… pic.twitter.com/F3OtTPVCW5
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) September 27, 2025