/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/87_19.jpg)
இயக்குநர் அனில் காட்ஸ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் சபரி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தெலுங்கு வருடப்பிறப்பு அன்று தொடங்கப்பட்டுமுழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்தை மகா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
காதல் கலந்த உளவியல் த்ரில்லர் படமாகஉருவாகும் இப்படத்தின் புதிய போஸ்டரைபடக்குழு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அந்த போஸ்டர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.வரலட்சுமி சரத்குமார்இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாகபடக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)