/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_154.jpg)
பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில்உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலைமுன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது. இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இப்படக்குழு தற்போது ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினைவிளம்பரப்படுத்தும் வகையில்படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிகை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.நடிகை வரலட்சுமி பேசியதாவது, “இந்தப் படத்தின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. எல்லோரும் கதை சொல்லும்போது, படம் இப்படி வரும் என நினைப்போம்.ஆனால் நாங்கள் யாருமே நினைக்காத அளவுஇப்படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. சைதன்யா மேடம் பிரசாந்த் கேட்ட அத்தனையும் தந்து, இப்படத்தை மிகப்பெரிய படமாகக் கொண்டு வந்துள்ளார்கள். பிரசாந்த், தேஜா இந்தப் படத்திற்காகக் கடுமையாகஒவ்வொரு ஃபிரேமிலும் உழைத்துள்ளனர். இந்தப் படம் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். புதுசாக இருக்கும். டிரெய்லர் பார்த்திருப்பீர்கள், ஆனால் படம் இன்னும் நிறைய ஆச்சரியம் தரும். சில படங்களின் விஷுவலை திரையரங்கில் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும் இது அப்படியான படம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)