நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்த 2012ஆம் ஆண்டு போடா போடி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

Advertisment

varalakshmi

நடிகை வரலட்சுமி 25 படங்களில் நடித்து முடித்திருப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிகவும் கடினமான, நீளமான பயணம் இது. இந்தக் கட்டத்தை எட்ட நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு எதிராக நின்றவர்களுக்கும் என் தன்னம்பிக்கையை இழக்கச் செய்தவர்களுக்கும் நன்றி. ஏனெனில் அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களால் தான் நான் வலிமை பெற்று, அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்க மேலும் தைரியம் பெற்றேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி. என் நல்லது, கெட்டதுக்கு நடுவில் என்னுடனேயே இருந்த என் ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கு நன்றி” என்றார்.