Advertisment

"கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணுங்க... இந்தியா சின்ன ஊர் கிடையாது 130 கோடி பேர் இருக்கிறோம்.." - வீடியோ வெளியிட்ட வரலட்சுமி!

கரோனா பயம் உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக நடிகை வரலட்சுமி வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், " எல்லாருக்கும் வணக்கம், நீங்க எல்லாம் வீட்டில் தான் இருப்பீங்க என்று நம்புறேன். நான் வீட்டில் தான் இருக்கேன். ஒரு இரண்டு மூன்று விஷயங்கள் சொல்லணும்னு நினைச்சேன். அதை மட்டும் நான் சொல்லிடுறேன். இதை ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க, இல்லாட்டி பிரச்சனை இல்லை. முதல்ல ஒரு குரூப் சுத்திக்கிட்டு இருக்காங்க, கரோனாவது, டேஷ்ஷாவதுனு, நான் அவங்ககிட்ட தான் பேசணும்னு நினைக்கிறேன். கரோனா வைரஸ் யாருக்கு வேணா வரலாம். இவர்களுக்குத்தான் வரும் என்று இல்லை. இதை நாம் முதல்ல ஒழுங்கா புரிஞ்சிக்கணும். லாக் டவுன் அன்னைக்கு 27 சதவீதம் பேர்தான் வீட்டில் இருந்திருக்கோம். மத்த பேர் வெளியில் தான் சுத்திக்கிட்டு இருந்திருக்கோம். இதோட சீரியஸ் யாருக்கும் புரிய மாட்டேங்குது. சமீபத்தில் கண்டேஜ் என்ற ஒரு படம் வெளிவந்தது. அந்தப் படம் கூட அமேசான் பிரைம்ல இருக்கு. அதை உடனே பாருங்க.

Advertisment

j

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நோய் எப்படி பரவுகிறது என்பதை தெளிவா சொல்லியிருப்பாங்க. அக்கம்பக்கம் வயதானவங்க இருப்பாங்க, அவர்களுக்கு முடிந்த அளவு உதவியா இருங்க. தேவையான அளவு இடைவெளியை வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இப்ப நிறைய பேரு வேலைக்குப் போகல, அதனால வீட்டுவாடகை வாங்குபவர்கள் அதைத் தள்ளுபடி செய்யுங்க. இந்த இக்கட்டான நேரத்துல அது அவர்களுக்கு உதவியா இருக்கும். அடுத்து யாரும் பதட்டம் அடைய வேண்டாம். கடைகள் எல்லாம் திறந்திருக்கு. தேவையானவற்றைக் கூட்டம் கூடாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணுங்க... இந்தியா சின்ன ஊர் கிடையாது, 130 கோடி பேர் இருக்கிறோம். அரசாங்கம் சொல்கின்ற வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோள்" என்று அந்த வீடியோவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe