style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நடிகை வரலட்சுமி நாயகியாக இல்லை என்றாலும் தற்போதுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிசி நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்தவகையில் இவர் நடிப்பில் அடுத்ததாக சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் 'சண்டக்கோழி 2' படத்தில் தான் ஏற்ற வில்லி வேடம் குறித்து அவர் பேசியபோது... "சண்டக்கோழி 2 படத்தில் நடிகர் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னிடம், உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல் இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு மிகுந்த அதிர்ச்சி ஆனது. இதனால் உடனே எனது எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன்" என்றார்.