varalakshmi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழ் சினிமாவில் புதிதாக வில்லி அவதாரம் எடுத்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் விஷாலும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு வெளியான நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், வரலட்சுமிக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் சமீபத்தில் வதந்தி பரவியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு மீண்டும் திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறன். அன்பான தோல்வியாளர்களே மீண்டும் முயற்சி செய்யுங்கள். 'நீங்கள் யார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment