Advertisment

2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி!

varalakshmi

கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குக் கிளம்பி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகை வரலட்சுமி நடத்தி வரும் சேவ் சக்தி ஃபவுண்டேஷன் மூலமாக பலருக்கு உதவி வருகிறார். அதே போல் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2,000 புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முகக் கவசம் மற்றும் மருத்துவப் பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

Advertisment

நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய், 'சாயா தேவி' மற்றும் 'சேவ் சக்தி' உறுப்பினர்களுடன் துரிதமாகச் செயல்பட்டு இந்தப் பொருட்களை அனைவருக்கும் வழங்க உதவி செய்தனர். இந்த உதவிகள் நல்லபடியாக நடைபெற உதவியாக இருந்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு.கவுதம் சந்தர் மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துக் கொண்டார்.

varalakshmi sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe