varalakshmi sarathkumar acted in advocate character in arasi movie

Advertisment

'பாம்பன்', 'பிறந்தாள் பராசக்தி', 'கலர்ஸ்', தெலுங்கில் பாலகிருஷ்ணா படம், கன்னடத்தில் ஒரு படம் எனப் பல படங்களைக் கைவசம் வைத்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், சூரியகிரண் இயக்கியுள்ள அரசி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக் ராஜு, அங்கனா ராய், மனிஷா ஜஸ்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞராக நடிக்கிறார். இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை ராஜராஜா மற்றும் வரலட்சுமி இணைந்து தயாரிக்க, விபின் சித்தார்த் இசையமைத்துள்ளார்.