/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/112_42.jpg)
போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ, நாடு முழுவதும் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை மொத்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜேஷ் ஹலீம் என்ற நபரின் உதவியுடன் இவை கடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 14வது நபராக இந்த வழக்கில் ஆதிலிங்கம் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமிக்கு உதவியாளராக பணியாற்றியது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் வழியாக வந்த பணத்தின் மூலம் சினிமாவில் பலருக்கும் ஆதிலிங்கம் பைனான்ஸ் உதவி செய்திருப்பதும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 'டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' என்ற அரசியல் கட்சியில் தேசிய துணைத் தலைவராகவும் இவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடிகை வரலட்சுமிக்கு ஏதேனும் தகவல்கள் தெரியுமா என்ற அடிப்படையில் விசாரிக்கவும், எந்த அடிப்படையில் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தார் என்பது பற்றி தெரிந்து கொள்ளவும் நடிகை வரலட்சுமியிடம் விசாரிக்க திட்டமிட்டு என்.ஐ.ஏ, சம்மன் அனுப்பியுள்ளனர். தற்பொழுது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்காக ஆஜராக இயலாது என அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் வரலட்சுமி தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தஅறிக்கையில், "ஆதிலிங்கம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ.வினால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளும் தவறானவை மற்றும் வெறும் வதந்திகள். அப்படி எந்த சம்மனும் எனக்கு அனுப்பப்படவில்லை.
ஆதிலிங்கம் 3 வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஃப்ரீலான்ஸ் மேலாளராக ஒரு குறுகிய காலம் மட்டுமே பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் நான் பல ஃப்ரீலான்ஸ் மேலாளர்களுடன் ஒரே நேரத்தில் பணிபுரிந்தேன். அவரது பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
#Fakenewspic.twitter.com/g13x9vFaQZ
— ????????? ??????????? (@varusarath5) August 29, 2023
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)