ADVERTISEMENT

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!

01:25 PM Jun 03, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அதேபோல் கரோனாவால் ஆதரவின்றி தவித்துவரும் விலங்குகளுக்கு சேவ் சக்தி பவுண்டேஷன் நிறுவனர் வரலட்சுமி சரத்குமாரும் இணை நிறுவனர் சாயா தேவியும் உணவளித்துவருகிறார்கள்.

இதற்காக திருவல்லிகேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலினை சந்தித்த வரலட்சுமி, ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதன் விவரங்களை அளித்தார். இதுகுறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''Save Shakti - Sankalp Beautiful World - Pedigree India' சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு இரண்டு டன் உணவு வழங்கபட்டுவருகிறது. இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டு சேர்க்க அதன் விவரத்தை சேவ் சக்தி அறக்கட்டளை நிறுவனர் நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி. வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

மேலும் Save Shakti Foundation - International Human Rights Organisation - Sankalp Beautiful World - Islamic Foundation Trust - EK foundation சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்களும் அளிக்கப்பட்டன. ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்படும் உதவிகள் வருமாறு...

மருத்துவமனை / ஆம்புலன்ஸ்
இரத்த வங்கி / ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் செறிவு
மருந்துகள்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர் ஆதரவு
ஆலோசனைகள்
வீட்டு பராமரிப்பு மற்றும் உணவு
தடுப்பூசி உதவி
இறுதி சடங்கு உதவி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT