Advertisment

''அவர்களுக்கு உணவளிப்பதற்காக வேலை செய்கின்ற அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி'' - வரலட்சுமி ட்வீட்!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் கரோனா பரவும் என்று பரவிய வதந்தியினால் பலரும் தங்களுடைய செல்லப் பிராணிகளை வெளியே ஆதரவின்றி விட்டுவிடுவதைக் கண்டித்து, பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது நடிகை வரலட்சுமி ஆதரவின்றி தவிக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

fef

''தேவையான உணவுகளைசப்ளை செய்த அனைத்து விலங்குகள் நல அமைப்புகளுக்கும், எங்கள் வாயில்லா ஜீவனான தெரு செல்லப்பிராணிகளின் சார்பாக ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் அவர்களுக்கு உணவளிப்பதற்காக வேலை செய்கின்ற அற்புதமான ஆத்மாக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமின்றி முடிந்தால் நாய்களுக்கும் உணவு வைத்து உதவி செய்யுங்கள்'' எனக் கூறியுள்ளார்.

varalakshmi sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe