Published on 22/01/2019 | Edited on 22/01/2019

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. கிருத்திகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவருடன், பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் துவங்கப்பட்டது.