bdhdfsnbfdnb

Advertisment

'ரோக்' திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி. ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டரில் குண்டலி (ஜாதகம்) போன்ற லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்திய படமாக உருவாகும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, ராதாகிருஷ்ணா தெலு தனது ரெஸ் என்டர்டெயின்மென்ட் எல்எல்பி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள 'தத்வமசி' படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.