/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/95_34.jpg)
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் வரலக்ஷ்மி சரத்குமார். அந்த வகையில் தமிழில் தற்போது தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் சபரி படத்திலும் மலையாளத்தில் கலர்ஸ் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் திருமணவாழ்க்கையில் அடியெடுத்துவைக்கிறார். அவருக்கு தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் 14 ஆண்டுகள்பழக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சய விழா மும்பையில் நேற்று (01.03.2024) நடந்த நிலையில்,இருவரின் குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/94_48.jpg)
திருமணம் இந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தற்போது திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)